திங்கள், 9 செப்டம்பர், 2013
கோவை இளையநிலா இசைக்குழு ******************* Kovai ILAYANILA Orchestra***: அப்துல்கலாம் அவர்களுடன் ஒரு பொன் மாலைப் பொழுதில்.....
கோவை இளையநிலா இசைக்குழு ******************* Kovai ILAYANILA Orchestra***: அப்துல்கலாம் அவர்களுடன் ஒரு பொன் மாலைப் பொழுதில்.....: 17 .07.2010 சனிக்கிழமை மாலை. உடுமலையை அடுத்த கணியூர் ஸ்ரீ வெங்கட கிருஷ்ணா மேனிலைப் பள்ளி மைதானம். பள்ளிமாணவர்கள் , ஆசிரியர்கள் , பெற...
ஞாயிறு, 8 செப்டம்பர், 2013
கோவை இளையநிலா இசைக்குழு ******************* Kovai ILAYANILA Orchestra***: அப்துல்கலாம் அவர்களுடன் ஒரு பொன் மாலைப் பொழுதில்.....
கோவை இளையநிலா இசைக்குழு ******************* Kovai ILAYANILA Orchestra***: அப்துல்கலாம் அவர்களுடன் ஒரு பொன் மாலைப் பொழுதில்.....: 17 .07.2010 சனிக்கிழமை மாலை. உடுமலையை அடுத்த கணியூர் ஸ்ரீ வெங்கட கிருஷ்ணா மேனிலைப் பள்ளி மைதானம். பள்ளிமாணவர்கள் , ஆசிரியர்கள் , பெற...
அப்துல்கலாம் அவர்களுடன் ஒரு பொன் மாலைப் பொழுதில்.......ilayanila johnsundar music crew blessed by dr.apj.abdulkalam
17.07.2010 சனிக்கிழமை மாலை. உடுமலையை அடுத்த
கணியூர் ஸ்ரீ வெங்கட கிருஷ்ணா மேனிலைப் பள்ளி மைதானம். பள்ளிமாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என ஏழாயிரம் பேர்
கூடியிருக்கின்றனர்.திடீரென வானம் இருட்டிக் கொள்ள மழைத்துளிகள் விழத் துவங்கின.
நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க வந்திருந்தருந்த திருமதி மகேஸ்வரி சற்குரு, நிகழ்ச்சி
முடியும் வரை மழை வராதிருக்க பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக் கொண்டார்.ஆச்சரியம்!
கொஞ்ச நேரத்தில் தூரல் நின்னு போச்சு. சட்டென்று பரபரப்பு தொற்றிக் கொள்கிறது
அங்கே. வாகனங்கள் வரிசையாக வந்து நிற்கின்றன.புன்னகைத்தபடி இறங்குகிறார் மேதகு
முன்னாள் குடியரசுத் தலைவரும்,அறிவியல் அறிஞருமான அப்துல்கலாம் அவர்கள்.
‘நிலாவிலும் பாரதம் பண்பாடும்
நிலைமை இன்று வந்ததே வா வா
வா !
கலாம் கண்ட கனவுகள்
எல்லாமும்
கண்ணின் முன் பலித்ததே வா வா
வா!’.....
இந்த நிகழ்வுக்காக பிரத்யேகமாக இசைக்கவி ரமணன்
அவர்களால் இயற்றப் பட்ட பாடலை விழா மேடைக்கு இடது புறம் அமைக்கப் பட்டிருந்த இசை
மேடையிலிருந்து பாடுகிறேன். மைதானம் முழுக்க குழுமியிருந்த
மாணவ மாணவியர் ஒவ்வொரு வரியின் கடைசியிலும் வா வா வா என என்னுடன் இணைந்து கோரஸாகப்
பாடி வரவேற்க.அது பரவசம் தரும் நிகழ்வாக அமைந்தது. மேடைக்கு வந்த
திரு.அப்துல்கலாம் அவர்கள், அனைவரையும் வணங்கி விட்டு, இசைக்குழுவினரைப் பார்த்து கை
அசைக்கிறார்.உற்சாகப் படுத்தும் வகையில் ஒரு சல்யூட் வைக்கிறார்.அடடா! அது
இசைக்கவி ரமணனின் பாடலுக்கு கிடைத்த பாராட்டு..இத்தனை விஷயங்களையும் திட்டமிட்டு
செயல் படுத்திய கிருஷ்ணா ஸ்வீட்ஸ் திரு.கிருஷ்ணன் அவர்களுடைய உயர்ந்த
எண்ணங்களுக்கு வந்து சேர்ந்த ராஜ மரியாதை.என் குழுவில் பங்கேற்ற சதீஷ்,குமார்,கருணா,பிரியா,ஜான் உள்ளிட்ட கலைஞர்களின்
ஒத்துழைப்பிற்கு கிட்டிய வெகுமதி. நான் செய்த பாக்கியம்.
நிகழ்ச்சியின் ஆரம்பத்தில்
பின்வாங்கிய மழை, விழா முடிந்ததும், காத்திருந்தது மாதிரி பன்னீர் தெளிக்கத்
துவங்கியது பாருங்கள்.இன்னும் அந்த ஈரம் இருக்கிறது நினைவில்.
அது போலவே 6.9.2013-ல் கோவை சபர்பன் பள்ளிக்கு வருகை தந்த திரு.அப்துல்கலாம் அவர்கள் மேடைக்கு வந்தவுடன் சபர்பன்
பள்ளிக்குழந்தைகள் அருமையான பக்திப்பாடலொன்றைப் பாடிய பின்பு நிலாவிலும் பாரதம் பண்பாடும் பாடலை இந்தமுறை அவர் அமர்ந்து கேட்குமாறு ஒரு
வாய்ப்பை உருவாக்கினார் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் திரு கிருஷ்ணன் அவர்கள்.
திரு.அப்துல்கலாம் அவர்கள் தனது பேச்சைத்துவங்குமுன் எங்கே ஜான்சுந்தர்? எங்கே
இசைக்கவி ரமணன்? என்று கேட்க என்ன தவம் செய்தேனோ?பங்கேற்ற இசைக் கலைஞர்கள்
ரமேஷ்ராஜா,ரமேஷ் ஜெகன்னாதன்,மைக்கேல்,புகைப்படக் கலைஞர் பூக்குட்டி கண்ணன்,தொகுத்து வழங்கிய மீனாசிவம்
மற்றும் ட்ரினிடி மெட்ரிக்பள்ளி பாடற்குழு குழந்தைகள் ஆனைவருக்கும் எனது
இதயப்பூர்வமான நன்றி... காலாண்டு தேர்வுகள் நடந்து கொண்டிருந்த வேளையிலும்
குழந்தைகளை அனுப்பி வைத்த ட்ரினிடி பள்ளி முதல்வர் திருமதி பாண்டிசெல்வி
அவர்களுக்கும்...வாய்ப்பை நல்கிய சபர்பன் சொசைட்டீ-யின் அங்கத்தினர்களுக்கும்
சபர்பன் பள்ளி ஆசிரியர்களுக்கும் என்னோடு இணைந்து சளைக்காமல் பாடிய சபர்பன் பள்ளி
மாணவ மாணவியர் அனைவருக்கும் என் அன்பும் நன்றியும்.......
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)