ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

கோவை இளையநிலா இசைக்குழு ******************* Kovai ILAYANILA Orchestra***: அப்துல்கலாம் அவர்களுடன் ஒரு பொன் மாலைப் பொழுதில்.....

கோவை இளையநிலா இசைக்குழு ******************* Kovai ILAYANILA Orchestra***: அப்துல்கலாம் அவர்களுடன் ஒரு பொன் மாலைப் பொழுதில்.....: 17 .07.2010 சனிக்கிழமை மாலை. உடுமலையை அடுத்த கணியூர் ஸ்ரீ வெங்கட கிருஷ்ணா மேனிலைப் பள்ளி மைதானம். பள்ளிமாணவர்கள் ,   ஆசிரியர்கள் ,   பெற...

அப்துல்கலாம் அவர்களுடன் ஒரு பொன் மாலைப் பொழுதில்.......ilayanila johnsundar music crew blessed by dr.apj.abdulkalam


17.07.2010 சனிக்கிழமை மாலை. உடுமலையை அடுத்த கணியூர் ஸ்ரீ வெங்கட கிருஷ்ணா மேனிலைப் பள்ளி மைதானம். பள்ளிமாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என ஏழாயிரம் பேர் கூடியிருக்கின்றனர்.திடீரென வானம் இருட்டிக் கொள்ள மழைத்துளிகள் விழத் துவங்கின. நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க வந்திருந்தருந்த திருமதி மகேஸ்வரி சற்குரு, நிகழ்ச்சி முடியும் வரை மழை வராதிருக்க பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக் கொண்டார்.ஆச்சரியம்! கொஞ்ச நேரத்தில் தூரல் நின்னு போச்சு. சட்டென்று பரபரப்பு தொற்றிக் கொள்கிறது அங்கே. வாகனங்கள் வரிசையாக வந்து நிற்கின்றன.புன்னகைத்தபடி இறங்குகிறார் மேதகு முன்னாள் குடியரசுத் தலைவரும்,அறிவியல் அறிஞருமான அப்துல்கலாம் அவர்கள்.

நிலாவிலும் பாரதம் பண்பாடும் 
நிலைமை இன்று வந்ததே வா வா வா !
கலாம் கண்ட கனவுகள் எல்லாமும் 
கண்ணின் முன் பலித்ததே வா வா வா!’.....
 இந்த நிகழ்வுக்காக பிரத்யேகமாக இசைக்கவி ரமணன் அவர்களால் இயற்றப் பட்ட பாடலை விழா மேடைக்கு இடது புறம் அமைக்கப் பட்டிருந்த இசை மேடையிலிருந்து  பாடுகிறேன். மைதானம் முழுக்க குழுமியிருந்த மாணவ மாணவியர் ஒவ்வொரு வரியின் கடைசியிலும் வா வா வா என என்னுடன் இணைந்து கோரஸாகப் பாடி வரவேற்க.அது பரவசம் தரும் நிகழ்வாக அமைந்தது. மேடைக்கு வந்த திரு.அப்துல்கலாம் அவர்கள், அனைவரையும் வணங்கி விட்டு, இசைக்குழுவினரைப் பார்த்து கை அசைக்கிறார்.உற்சாகப் படுத்தும் வகையில் ஒரு சல்யூட் வைக்கிறார்.அடடா! அது இசைக்கவி ரமணனின் பாடலுக்கு கிடைத்த பாராட்டு..இத்தனை விஷயங்களையும் திட்டமிட்டு செயல் படுத்திய கிருஷ்ணா ஸ்வீட்ஸ் திரு.கிருஷ்ணன் அவர்களுடைய உயர்ந்த எண்ணங்களுக்கு வந்து சேர்ந்த ராஜ மரியாதை.என் குழுவில் பங்கேற்ற சதீஷ்,குமார்,கருணா,பிரியா,ஜான் உள்ளிட்ட கலைஞர்களின் ஒத்துழைப்பிற்கு கிட்டிய வெகுமதி.  நான் செய்த பாக்கியம்.   
நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் பின்வாங்கிய மழை, விழா முடிந்ததும், காத்திருந்தது மாதிரி பன்னீர் தெளிக்கத் துவங்கியது பாருங்கள்.இன்னும் அந்த ஈரம் இருக்கிறது நினைவில். 


அது போலவே 6.9.2013-ல் கோவை சபர்பன் பள்ளிக்கு வருகை தந்த திரு.அப்துல்கலாம் அவர்கள் மேடைக்கு வந்தவுடன் சபர்பன் பள்ளிக்குழந்தைகள் அருமையான பக்திப்பாடலொன்றைப்  பாடிய பின்பு நிலாவிலும் பாரதம் பண்பாடும்  பாடலை இந்தமுறை அவர் அமர்ந்து கேட்குமாறு ஒரு வாய்ப்பை உருவாக்கினார் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் திரு கிருஷ்ணன் அவர்கள். திரு.அப்துல்கலாம் அவர்கள் தனது பேச்சைத்துவங்குமுன் எங்கே ஜான்சுந்தர்? எங்கே இசைக்கவி ரமணன்? என்று கேட்க என்ன தவம் செய்தேனோ?பங்கேற்ற இசைக் கலைஞர்கள் ரமேஷ்ராஜா,ரமேஷ் ஜெகன்னாதன்,மைக்கேல்,புகைப்படக் கலைஞர் பூக்குட்டி கண்ணன்,தொகுத்து வழங்கிய மீனாசிவம் மற்றும் ட்ரினிடி மெட்ரிக்பள்ளி பாடற்குழு குழந்தைகள் ஆனைவருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றி... காலாண்டு தேர்வுகள் நடந்து கொண்டிருந்த வேளையிலும் குழந்தைகளை அனுப்பி வைத்த ட்ரினிடி பள்ளி முதல்வர் திருமதி பாண்டிசெல்வி அவர்களுக்கும்...வாய்ப்பை நல்கிய சபர்பன் சொசைட்டீ-யின் அங்கத்தினர்களுக்கும் சபர்பன் பள்ளி ஆசிரியர்களுக்கும் என்னோடு இணைந்து சளைக்காமல் பாடிய சபர்பன் பள்ளி மாணவ மாணவியர் அனைவருக்கும் என் அன்பும் நன்றியும்.......








சனி, 1 ஜூன், 2013

திரு.சைலேந்திரபாபு IPS , மாவட்ட ஆட்சியர் உமா நாத் ஆகியோருடன் இளையநிலா





டியூட்டி டைம் முடிஞ்சது நான் கிளம்பட்டுமாவெனச் சொல்லி விட்டு பகல் நகர, சாவகாசமாக இருளை எடுத்து இரவு உடுத்தத் துவங்கிய இளமாலை நேரம். புல்தரையில் அமைக்கப் பட்டிருந்த அழகான சிறிய மேடையைச் சுற்றிலும் வெள்ளைச்சுடிதார் போட்ட நாற்காலிகள் ,சிவப்பு ரிப்பனை துப்பட்டாவாக அணிந்து காத்துக் கொண்டிருக்கின்றன. நீதித் துறையைச் சார்ந்த உயரதிகாரிகள் மட்டும் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியில் வழக்கமான பணியைத் தவிர்த்திருந்தேன். ரமேஷ்ராஜா பியானோவில் கண்ணியமான பாடல்களை இசைக்கத் துவங்கியிருந்த போது,அந்தச் சூழல் கொஞ்சம் பெருமிதத்தை தந்த்து எனக்கு.கோவையில் பியானோவை மெல்லிசை மேடைகளில் பயன்படுத்திய முதல் இசைக் குழு எங்களுடையது தான் என்பதுவும் ஒரு  காரணம்.
ஏற்கனவே மிடுக்காக இருந்த இடம் இன்னும் ஒரு சுற்று முறுக்கிக் கொண்டது. திரு. சைலேந்திர பாபு அவர்கள் அங்கு வந்த பின்பு. ஜீன்ஸ் பேண்ட்டும் காட்டன் முழுக்கை சட்டையும் அணிந்து கம்பீரமாக அமர்ந்திருந்தவரைப் பார்த்ததும், ‘கற்க கற்கபாட்டு ஓடத்துவங்கியது மனதிற்குள்.( நம்ம புத்தி வேறெங்கு போகும்?) அந்தப் பாட்டில் வருவது போல ‘ராகவன்என்று வாய்விட்டே சொல்லி விட்டேன் ஆர்வத்தில்.சொல்லுங்கண்ணாஎன்று பக்கத்தில் வந்த எங்கள் ஓட்டுனரை என்ன என்பது போல் பார்த்தேன்.அவரோ என்னை ஐயோ பாவம் யாரு பெத்த புள்ளையோஎன்பது மாதிரியே பார்த்தார்.சட்டென்று மண்டைக்குள் பல்பு எரிந்ததும், புரிந்தது.டிரைவரண்ணா என்று மட்டுமே அழைக்கப் பட்டு வந்த அவர்தம் இயற்பெயர் ராகவன் என்பதாகும்!
கமலையும் கவுதம்மேனனையும் ஹாரிஸ் ஜெயராஜையும் உஷ்ஷென்று உதடுகளின் மேல் விரல் வைத்து எச்சரித்து ரகசியக் குரலில் அப்புறமா வாங்க என்று சொல்லி அனுப்பி வைத்தேன்.
கையிலிருந்த செல்போனைத் தட்டித் தாளம் போட்டவாறு ரசித்துக் கொண்டிருந்தார் திரு.சைலேந்திர பாபு. இதுதான் சமயமென்று,அழகே அழகு தேவதை’,                         ’ நின்னைச்சரணடைந்தேன்’,’சின்ன சின்ன ஆசை’, ’யாரந்த நிலவு’,’உறவுகள் தொடர்கதைபோன்ற பாடல்களை அனுப்பி அவரைச் சுற்றி வளைக்கச் சொன்னேன்.
புயல் வரும் பாதையில் புல்லாங்குழலை நட்டுவைத்தால்
புரட்ட வரும் புயலுக்கு பொசுக்கென்று கால் முறியும்
என்பார் கவியன்பன் கேயார் பாபு . நானோ தபேலா,புல்லாங்குழல் தவிர பியானோவையும் வைத்துக் கொண்டு ஃபுல் ஃபார்மில் இருந்தேன்.
நிகழ்ச்சி முடிந்த பின் பாடகி ரோகிணி சுரேஷுக்காக ஆட்டோகிராஃப் வாங்கிக் கொடுக்கும் போது பேச்சினூடே ‘நாங்க எல்லாம் உங்க ரசிகர்கள் சார்என்றேன்.என்னை உங்க ரசிகனாக்கிட்டீங்களேஎன்றார் அந்த கம்பீரக் கலாரசிகர்.திரும்பிப் பின்னால் பார்த்தேன். பதக்கத்தைக் குத்தி விடும் போது சலனமின்றி விறைப்பாக நிற்கும் சிப்பாய் மாதிரியிருந்தான் தபேலா பூபதி. பின்பக்கமாக வந்து என்னைக் கட்டிக் கொண்டார் ரமேஷ் ஜெகன்னாதன். புல்லாங்குழல் பெருமாளோ ‘ஒவ்வொரு பூக்களுமேவுக்காக படத்தில் சினேகாவின் பின்னாலிருந்து அழுததை விடவும் அதிகமாக அழுது விடும் தீர்மானத்திலிருந்தான்.( அன்று அவனுக்குப் பொன்னாடை போர்த்தியவர் கலெக்டர் உமாநாத். )