என்னோடு நட்பு பாராட்டும் நபர்களில் மிக முக்கியமானவர் மருத்துவர் சந்திரசேகர். உண்மையான அக்கறை கொண்டு கனிவாகப் பேசும் நல்ல உள்ளம் கொண்ட மனிதரோடு தொடர்பில் இருப்பது குறித்து பெரு மகிழ்வு உண்டெனக்கு. கோவை குப்புசாமி மருத்துவ மனையின் இருதய அறுவை சிகிச்சை நிபுணரான சந்துரு, பாட்டுக்கு மயங்கும் நோயால் பீடிக்கப் பட்டிருக்கிறார். நடிகர் அஜித் குமாருக்கும் ஹிந்தி நடிகர் அனில்கபூருக்கும் அண்ணன் மாதிரியே இருக்கும் அழகிய தோற்றம் கொண்ட இவர், பாடவும் செய்வார். மருத்துவமனையில் பணிபுரிகிறவர்களுக்குள்ளே இருக்கும் கலையார்வத்தை வளர்த்தெடுக்கும் விதமாக, ஆராதனா ஃபைன் ஆர்ட்ஸ் கிளப் என்ற கலைமன்றம் ஒன்றை நிறுவி, அதில் டாக்டர் சந்துருவுக்கு முக்கிய பொறுப்பையும் பொருத்தமாக வழங்கியிருக்கிறது நிர்வாகம். தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் பாடும் இளம் பாடகர்களுக்கு மார்க் போடும் பிரபலங்களை வரவழைத்து மருத்துவமனையின் பாடகர்களுக்கும் உற்சாக ஊசி போடுவார் சந்துரு.மருத்துவ மனையில் பணிபுரியும் நண்பர்களும் சாதாரணமானவர்கள் அல்ல. ஆளுக்கொரு கலைத்திறனை வைத்துக் கொண்டு பிய்த்து உதறுகிறார்கள். பின்னணியில் இருந்து ஊக்குவிப்பதற்குத்தான் டாக்டர் சந்திர சேகர் இருக்கிறாரே ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக